பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 200-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதனால் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர இருக்கிறார். இந்த நிலையில் பீகார் தேர்தலில் என்டிஏ-யின் அமோக வெற்றி குறித்து சந்திரபாபு நாயுடு கூறியதாவது: பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய மற்றும் வரலாற்று பெற்றி, முற்போக்கு நிர்வாகத்தை தொடர்ந்து பீகார அரசால் கொடுக்க முடியும். மற்றும் பிரதமர் மோடியின் விக்ஷித் பாரத்தின் மீதான தொலைநோக்கு பார்வை ஆகியவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. நிதிஷ் குமார் மற்றும் வெற்றி பெற்ற பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினருக்கு வாழ்த்துகள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>