பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமார் முதல்-அமைச்சராக உள்ளார். மாநிலத்தில் நீண்ட காலம் முதல்-அமைச்சராக இருந்த பெருமைக்கு சொந்தக்காரரான நிதிஷ்குமார் சமீபத்தில்தான் 75 வயதை நிறைவு செய்தார். மாநிலத்தில் 10-வது முறையாக கடந்த நவம்பர் மாதம்தான் முதல்-அமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்ற நிலையில், தனது முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பீகாரில் அமையும் புதிய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்: வழிகாட்டுதல் இருக்கும் என்று நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நிதிஷ் குமார் பதவி விலக எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிதிஷ்குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>