புதிதாக அமையும் தவெக அரசில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் – கிரிஷ் சோடங்கர் பேட்டி

Share

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றுள்ளது. அக்கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், தவெகவுக்கு கூடுதலாக 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போது காங்கிரஸ் தரப்பிலிருந்து 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். இந்தச் சூழலில் அடுத்த ஆதரவு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுக உடனான காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து விஜய்யை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் சென்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கிரிஸ் சோடங்கர், “புதிதாக அமையும் தவெக அரசில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும்”என்றார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>