புதிய தலைமைச்செயலகம் அமைக்க முதல்-அமைச்சரின் ஒப்புதலின்றி நிலம் தேர்வாயென கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்

Share

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க முதல்-அமைச்சரின் ஒப்புதலின்றி நிலம் தேர்வாயென திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்த தமிழக வெற்றி கழக அரசு, சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிடப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து முதல்-அமைச்சர் விஜய் இன்னும் எந்தவொரு இறுதியான முடிவையும் எடுக்கவில்லை என விளையாட்டு மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் தொடர்பான தமிழக அரசின் ஆணையைக் குறிப்பிட்டு திமுக எம்.பி. கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் கூறுகிறார். அப்படியானால், 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட இந்த அரசாணை எதற்காக? முதலமைச்சரின் ஒப்புதல் இல்லாமலேயே அதிகாரிகள் 25.55 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்களா? என அதில் பதிவிட்டுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>