புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தமிழக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தொகுதி முழுவதும் வீதி வீதியாக திறந்த ஜிப்பில் சென்று பிரசாரம் செய்தார். முன்னதாக புதுச்சேரி விமான நிலையம் வந்த அண்ணாலையை பா.ஜ.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியை பொறுத்தவரை உலகத்தில் எங்கும் இல்லாத விசித்திரமான கூட்டணி எதிரில் போட்டியிடுகிறது. கூட்டணி தர்மத்தை மீறி கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்சி கட்டுப்பாட்டை மீறி வேட்புமனு தாக்கல் செய்ததாக கூறி காங்கிரஸ் சார்பில் 6 வேட்பாளர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இதுவே கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாததற்கான உதாரணம். அதேபோல் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்டு, மார்க்சிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள இந்த கூட்டணியில் பரஸ்பர மரியாதை இல்லை. 30 தொகுதிக்கு கூட சரியான இடஒதுக்கீடு செய்து ஒருமித்தமாக செயல்பட முடியாத கூட்டணி, ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு எப்படி நல்ல ஆட்சி வழங்கும்? கூட்டணி அமைப்பதில் தோல்வி, வேட்புமனு தாக்கலில் தோல்வி. அனைத்திலும் இந்தியா கூட்டணி தோல்வியடைந்துள்ளது. இந்தியா கூட்டணி மக்களால் நிராகரிக்கப்பட்டு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். மக்கள் அவர்களுக்கு தக்க பதிலை வழங்குவார்கள் என்றார்.
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி மக்களால் நிராகரிக்கப்படும் – அண்ணாமலை
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>