‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உருவானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். புதுச்சேரி அரசு வழங்கும் 2024ம் ஆண்டுற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருதை கார்த்திக் சுப்பராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் தேர்வாகியுள்ளது. புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்பட விழா வரும் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவில் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் வழங்கப்படும் இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம் பரிசளிக்கப்படுகிறது. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘லைம்லைட்’ பிரிவில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் ஏற்கனேவே தேர்வானது குறிப்பிடத்தக்கது. கோவாவில் நடைபெற்ற 55-வது இந்திய திரைப்பட விழாவிலும் இப்படம் தேர்வாகியிருந்தது.
புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்பட விருதுக்கு “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” தேர்வு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>