புதுவை சட்டமன்ற தேர்தல்: முதல்வர் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டி: வேட்பு மனு தாக்கல்

Share

புதுவையில் வருகிற ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கிய நிலையில், 23ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையாமல் உள்ளது. திமுக கூட்டணியிலும் சரி, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியிலும் சரி இழுபறி நீடித்து வருகிறது. பாஜகவுடன்தான் கூட்டணியில் இருக்கிறோம் என்றும், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் முதல்வர் ரங்கசாமி கூறினாலும், கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடையாமல் உள்ளது. இந்த நிலையில், மங்களம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட முதல்வர் ரங்கசாமி முடிவு எடுத்துள்ளார். இதன்படி, தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் தொகுதியில் தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் ஏனம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரிடம் முதல்வர் ரங்கசாமி தோல்வி அடைந்தார். எனினும், போட்டியிட்ட தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>