புத்தாண்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்

Share

மன்னார் நகர சபைத் தலைவர் டானியல் வசந்தன் அவர்களின் புத்தாண்டுச் செய்தி

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

(31-12-2025)

பிறந்துள்ள புத்தாண்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என இந்நாளில் பிரார்த்திப்பதாக மன்னார் நகர சபைத் தலைவர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.

-புது வருட பிறப்பை யொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

ஊழல் அற்ற தூய்மையான அரசாட்சி ஊடாக அனைத்து மக்களுக்கும் சமனான வாய்ப்பு பிறந்திருக்கும் புத்தாண்டில் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றேன்.

பிறந்துள்ள புது வருடத்தில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்,காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் .மேலும் மாகாண சபை தேர்தலை நடத்தி அதன் ஊடாக குறைந்தபட்ச உரிமையாவது எமது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என இந்த அரசை நான் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

அனைத்து மக்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>