புற்றுநோய்க்கான உயிர்காக்கும் மருந்துகளை இலகுவில் பெறும் வழியை ஒன்ராறியோ அரசாங்கம் துரிதப்படுத்துகிறது என்கிறார் விஜய் தணிகாசலம்

Share

ஒன்ராறியோவின் ‘FAST’ (Funding Advanced Systemic Therapies) எனப்படும் புதிய முன்னோடித் திட்டம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கான மருந்துகளுக்குக் காத்திருக்கும் கால அளவை ஒரு வருடத்தால் குறைத்து, மருத்துவப் பயனாளிகள் முன்கூட்டியே ஒவ்வோர் ஆண்டும் 7–10 உயர் சிகிச்சைகளை எளிதாகப் பெற முடியும். இம்முயற்சி, ஏறத்தாழ 9 மில்லியன் ஒன்ராறியோ வாழ் மக்களுக்கு 9.5 பில்லியன் டொலர் முதலீட்டை அடிப்படையாகக் கொண்ட ஒன்ராறியோ மருத்துவ நலன் திட்டத்தின் கீழ் 5,900 மருந்துகளுக்கான காப்பீட்டை வழங்கும். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள், “ஒவ்வொரு மருத்துவப் பயனாளியும் தனக்கு வேண்டிய பராமரிப்பு மற்றும் சிகிச்சைகளை உரிய நேரத்தில் பெற உரித்துடையவர். இத்திட்டம் உயிர்களைக் காக்கவும், ஸ்காபரோ போன்ற சமூகங்களில் உள்ள குடும்பங்களுக்கு நம்பிக்கை கொடுக்கவும் உதவும்” என்றார்.

புற்றுநோய்க்கான மருந்துகளுக்கும் அவை சார்ந்த ஏனைய சிகிச்சைகளுக்காகவும் ஒன்ராறியோ ஆண்டுதோறும் 2.75 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதால், இந்நடவடிக்கை ஸ்காபரோ வதிவாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே முக்கிய சிகிச்சைகளை விரைந்து, நியாயமாகப் பெற இது உறுதி செய்கிறது. ‘FAST’ முன்னோடித் திட்டமானது அனைத்து சமூகங்களுக்கும் நோயாளிகள் பராமரிப்பை மேம்படுத்துவதற்கும் சுகாதார சேவையை வலுவாக்கவும் ஒன்ராறியோ அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>