டில்லியில் வசிக்கும் பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கும் லட்சுமி திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டில்லி சட்டசபை தேர்தலின்போது பா.ஜ.க. தனது பரப்புரையின்போது, ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் பெண்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆம் ஆத்மி ஆட்சியை விழ்த்தி பா.ஜ.க. ஆட்சியை பிடித்தது. ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றார். இந்த நிலையில், லட்சுமி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு டில்லி மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான இணையதளம் வருகிற 1-ந்தேதி (ஆகஸ்ட்) வெளியிடப்படும் என்று டில்லி மாநில முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 28-ந்தேதி ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் 5100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. டில்லி மாநிலம் முழுவதும் சுமார் 17 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள் எனத் தெரிகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 21 வயது முதல் 60 வயதுடைய பெண்கள் மட்டுமே தகுதியுடைவர்கள் ஆவார்கள். ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு வீட்டில் ஒரு பெண் மட்டுமே இந்த பயனை அடைய முடியும். பயன்பெறும் நபர் அல்லது குடும்பத்தினர் மீது குற்ற வழக்குகள் இருக்கக் கூடாது. அரசு ஊழியர்கள் இருக்கக் கூடாது. வருமான வரி செலுத்துபவர்கள் இருக்கக்கூடாது. பென்சன் பெறுபவர்கள் இருக்கக் கூடாது. நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கக் கூடாது. பயனாளி அல்லது அவரது குடும்பத்தினர் டில்லியில் 10 வருடம் வசித்திருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகையாக 21 ஆயிரம் ரூபாய், ஊட்டச்சத்து அடங்கிய 6 பெட்டகங்கள், ஏழைக்குடும்ப பெண்களுக்கு 500 ரூபாயில் சமையல் எரிவாயு தோம்பு வழங்கப்படும். அத்துடன் வருடத்திற்கு 2 இலவசமாக வழங்கப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வரையில் இலவசமாக மருத்துவம் வழங்கப்படும். வயது மூத்தோருக்கான பென்சனை (60 வயது முதல் 70 வயது) 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 70 வயதிற்கு மேல் உடையவர்களுகு்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2500 வழங்கும் திட்டத்திற்கு டில்லி அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>