பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது !

Share

பு.கஜிந்தன்

பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச பிரிவுக்கு உட்பட்ட பெண்களுக்கான கலாச்சார நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவம் 17ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் (17) வடமராட்சி கிழக்கு கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது

இவ் நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மலர்க்கொத்து கொடுத்து அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டு, வரவேற்பு நடனம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

பின்னர் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இச் சான்றிதழ்கள், பெண்கள் சம்மந்தமான அடிப்படை சட்ட உரிமைகள் தொடர்பாக பயிற்சியூட்டப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து விருந்தினர்களுக்கான நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் சிவலிங்கம் உஷாவும், சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரோகிணி, மற்றும் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரமும் கலந்துகொண்டதுடன், மருதங்கேணி கிராம நிர்வாக அலுவலர், பொருளாதார உத்தியோகத்தர் மற்றும் பெண்கள் வாழ்வுரிமை சங்கத்தின் உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>