பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு இயக்குநர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார்

Share

பெரியார், அண்ணா, அம்பேத்கர் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு இயக்குநர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி வரலாற்றைக் கூறும் பகுதியில் இடம்பெற்றிருந்த முக்கியத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தன. சமூக நீதி சார்ந்த கருத்துகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் இயக்குநர் அமீர், இந்த வரலாற்றுத் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டதை வன்மையாகக் கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“பெரியார், அண்ணா, அம்பேத்கர் என்பது பெயர்கள் அல்ல… தமிழ்நாட்டின் அடையாளங்கள். அதை அழிக்கவோ மறைக்கவோ எந்த முகமூடியோடு வந்தாலும் அதை எதிர்க்க வேண்டியது தமிழர்களின் கடமையாகும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>