பெரும்பான்மையின மக்களும் முஸ்லிம் மக்களும் அதிகளவு வாழும் வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெணமணி ஒருவர் நியமிக்கப்பெற்றுள்ளார்!

Share

பு.கஜிந்தன்

அநுராக புரத்தை தலைநகராகக் கொண்ட வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் அவர்கள் தனது கடமைகளை 14ம் திகதி அன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக கடமையாற்றிய சுபாஜினி நிர்வாக சேவை சிறப்பு தரத்துக்கு பதவி உயர்வு பெற்ற நிலையில் வட மத்திய மாகாண சபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார்.

பெரும்பான்மையின மக்களும் முஸ்லின் மக்களும் அதிகளவும் சிறிய தொகையில் தமிழ் மக்களும் வாழும் வட மத்திய மாகாணத்தில் ஒரு உயர் நிர்வாகப் பதவியில் இவ்வாறு நியமனம் பெற்ற சுபாஜினி அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>