வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை மேற்கு சுழிபுரம் பகுதியில் வசித்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று மதியம் தூக்கிட்ட நிலையில் கயிறு அறுந்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கெலும் சஞ்சீவ ரூபசிங்க என்ற 28 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் அநுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு பொன்னாலை – சுழிபுரம் மேற்கில் திருமணம் செய்து அங்கு வசித்து வந்துள்ளார். இவருக்கு போதைவஸ்து பழக்கம் உள்ளது.
அந்தவகையில் ஏற்கனவே ஒருதடவை இவரை போதைவஸ்து பாவனை செய்ய வேண்டாம் என தடுத்தவேளை குழாய் மின்குமிளை (tube light) உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில் போதைப்பொருள் பாவிக்க வேண்டாம் என அறிவுறுத்தி தடுக்கப்பட்ட நிலையில் 28-07-2024 ஆன்றையதினம் வீட்டுக்கு அருகேயுள்ள மரம் ஒன்றில் தூக்கிட்டுள்ளார். இந்நிலையில் தூக்கிட்ட கயிறு அறுந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>