பொன் சிவகுமாரின் 51நினைவு தினத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் பங்கு கொள்ள ஏற்பாட்டுக் குழு அழைப்பு!

Share

பு.கஜிந்தன்

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரின் 51 நினைவுதினம் 5ம் திகதி வியாழக்கிழமை யாழ். உரும்பிராய் சந்திப் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரின் நினைவு தூபியில் காலை 9மணிக்கு ஆரம்பமாக உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பொன் சிவகுமார் தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக தனது இன்னுயிரை நீத்த ஒரு மாவீரன்.

அவரது தியாகம் தொடர்ச்சியாக எமது சந்ததிக்கு கடத்திச் செல்லப்பட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் நினைவு தினத்தை அனுஷ்டித்து வருகிறோம்.

வியாழக்கிழமை 6ம் திகதி இடம்பெறவுள்ள 51 ஆவது நினைவு தினத்துக்கு வழமை போன்று கட்சி பேதங்களைக் கடந்து அனைவரும் பங்கு கொள்வதுடன் பொதுமக்களும் நினைவு தினத்தில் பங்கு கொள்ள வேண்டும் என அழைப்பு விடுகிறோம் என தெரிவிக்கப்பட்டது.

குறித்த ஊடக சந்திப்பில் பொன் சிவகுமாரனின் நண்பனும் சக போராளிமான மதி மற்றும் நினைவேந்தல் குழு உறுப்பினர் ஈ.வி.செந்தூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>