போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா தாக்குதல் – 3 பேர் மரணம்

Share

வெனிசுலா, மெக்சிகோ போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வெனிசுலாவில் இருந்து கடல் வழியாக படகில் போதைப்பொருள் கடத்தி வந்த கும்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கரீபியன் தீவுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த படகு மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது. கரீபியன் கடல் வழியாக சர்வதேச கடல்பரப்பில் வந்துகொண்டிருந்த படகு மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் படகில் போதைப்பொருள் கடத்தி வந்த 3 பேர் உயிரிழந்தனர். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>