போதைப்பொருள் தடுப்பு பிரிவால் சிறுவன் உட்பட இருவருக்கு அச்சுறுத்தல்

Exif_JPEG_420

Share

– மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தகப்பன் மற்றும் மகன் ஆகிய இருவரையும் அ்சுசுறுத்தியுள்ளதாக 25-07-2024 அன்று வியாழக்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தல் முறைப்பாடு இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 20/07/2024 சனிக்கிழமை நள்ளிரவுவேளை தமது வீட்டிற்க்குள் நுழைந்த தம்மை போதை தடுப்பு பொலிசார் என அறிமுகம் செய்து தந்தை மற்றும் மகனை கை விலங்கிட்டு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளதாகவும், இது நான்காவது தடவையாக இடம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்ததுடன் தனது மகன் தொடர்ந்து கல்வி கற்பதற்க்கு அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் அன்றையதினம் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>