போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபர் புதினை சந்தித்துப் பேச தயார் – ஜெலன்ஸ்கி

Share

உக்ரைன் ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷியா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார். அதேநேரம், பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்கஅதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: போரை முடிவுக்கு கொண்டு வர ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன். உக்ரைன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷியா தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>