போலந்தில் அமெரிக்காவின் நிரந்தர ராணுவ தளம் அமைக்க அழைப்பு விடுத்துள்ளது

Share

போலந்தில் நிரந்தர அமெரிக்க ராணுவ தளத்தை அமைக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து, அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடான போலந்து, தனது பாதுகாப்பை பலப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேட்டோ அமைப்பின் கிழக்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள அந்நாடு, அமெரிக்காவின் முழுமையான ராணுவ ஆதரவை எதிர்பார்த்து காத்திருந்தது. இந்த சூழ்நிலையில், போலந்தில் நிரந்தர அமெரிக்க ராணுவ தளத்தை அமைக்க அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து, அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து போலந்து பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் செசாரி டாம்சிக் கூறுகையில், “போலந்தின் இந்த சலுகைக்கு அமெரிக்கா ஆர்வம் காட்டியுள்ளது. கூட்டு திட்டமான இதற்கான செலவுகளை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது” என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>