“மகாவீர் கர்ணா” படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மகாவீர் கர்ணா’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. பென் மூவீஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டுடியோஸ் இணைந்து இந்திய சினிமாவை இதுவரை காணாத புதிய காட்சி உலகிற்கு அழைத்துச் செல்லும் பிரம்மாண்டமான ‘ஹைப்ரிட் லைவ்-ஆக்ஷன்’ திரைப்படமான ‘மகாவீர் கர்ணா’ படத்தை பெருமையுடன் வழங்குகின்றன. இப்படத்தை ஜெயந்திலால் கடா வழங்குகிறார். ‘ராட்சசன்’ மற்றும் ‘கில்லாடி’ உள்ளிட்ட வணிகரீதியாக வெற்றிபெற்ற, பல்வேறு ஜானர்களில் திரைப்படங்களை இயக்கிய பிளாக்பஸ்டர் இயக்குநர் ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். ஆக்சன், திரில்லர் மற்றும் கமர்ஷியல் சினிமா என பல்வேறு களங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ரமேஷ் வர்மா, தற்போது மகாபாரதத்தின் காலத்தால் அழியாத கதாபாத்திரமான கர்ணனின் கதையை புதிய களத்தில் படைக்கிறார். ‘மகாவீர் கர்ணா’ மூலம், லைவ்-ஆக்சன் வடிவத்தின் உணர்வுப்பூர்வமான தாக்கத்தையும், நவீன விஷுவல் எபெக்ட்ஸின் எல்லையற்ற சாத்தியங்களையும் ஒன்றிணைக்கும் ஹைப்ரிட் லைவ்-ஆக்சன் முறையை அவர் கையாண்டுள்ளார்.

கர்ணனை படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாகத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் இந்த முயற்சியை மேலும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. கர்ணனின் கதை வெறும் புகழைத் தேடும் ஒரு வீரனின் கதை மட்டுமல்ல, தான் கொடுத்த வாக்கை அனைத்திற்கும் மேலாகக் கருதிய ஒரு மனிதனின் கதை. குந்திக்கு பிறந்தாலும், அரச குடும்ப அங்கீகாரத்திலிருந்து விலகி வளர்ந்த கர்ணன், நிராகரிப்பு, அடையாளம் மற்றும் விதி ஆகியவற்றுடன் தனது வாழ்நாள் முழுவதும் போராடுகிறார். இருந்தாலும், தான் தேர்ந்தெடுத்த மனிதர்கள் மீதும் கொள்கைகள் மீதும் அவர் கொண்டிருந்த விசுவாசம் அசைக்க முடியாததாக இருந்தது. தான் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக எந்த விளைவையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்த கர்ணனின் உறுதியும், அவரது புகழ்பெற்ற கொடைத்தன்மையும், அவரது குணத்தின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. தன் வார்த்தையை மீறுவதைவிட அதன் விளைவுகளை எதிர்கொள்வதையே விரும்பியவர் கர்ணன். இந்த சமரசமற்ற குணமே, மகாபாரதத்தின் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் சோகமான கதாபாத்திரங்களில் ஒருவராக கர்ணனை மாற்றுகிறது. இதுவே ‘மகாவீர் கர்ணா’ படத்தின் உணர்வுப்பூர்வமான அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த நிலையில், ‘மகாவீர் கர்ணா’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. டீசரில், வீரர்கள், ராஜ்ஜியங்கள், ஆயுதங்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சிகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதியும் விஷயம், தான் கொடுத்த வாக்கில் உறுதியாக நிற்கும் ஒரு மனிதனின் இருப்புதான். கர்ணனை வெறும் புராணக் கதாபாத்திரமாகவோ அல்லது பிரம்மாண்டமான புராண திரைப்படமாகவோ அணுகாமல், கௌரவம், விசுவாசம், நட்பு, துரோகம், விதி மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ஒருவர் கொடுக்கும் விலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆழமான மனித உணர்வுகளின் காவியமாக உருவாக்கியிருப்பதை முன்னோட்டத்தின் காட்சியமைப்பு உணர்த்துகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>