மாவட்ட செயலகமாக இருந்தாலும் சரி, பிரதேச செயலகமாக இருந்தாலும் சரி அங்கே பணிபுரிகின்றவர்கள் அரசாங்கத்துக்கு சார்ந்து வேலை செய்வதற்கு மக்களிடத்தே ஓடி வருகின்றார்கள். அவர்களுடைய பணிகளை அவர்கள் சீராக செய்வதில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரது சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்தார்.
நேற்றையதினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் தங்களது தேவைகளுக்காக அலுவலகங்களுக்கு சென்றால் அவர்களை இருத்தி வைத்துவிட்டு தாங்கள் தொலைபேசியுடன் இருப்பார்கள். தங்களுடைய காரியங்கள் ஆகும்வரைக்கும் அவர்கள் மக்களை திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.
ஒரு சில கிராம சேவையாளர்கள்கூட இந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு மண்ணில் என்ன நடந்தது என்பதை நன்கு புரிந்துகொண்டவர்கள். அவர்கள் இப்படியான வேலைகளுக்கு முகம் கொடுப்பதை அறியமுடியவில்லை. ஒரு சில கிராம சேவையாளர்கள், இன்றைக்கு எங்களது பிள்ளைகளது செய்தி வருமா என்று ஏக்கத்துடன் இருக்கின்ற தாய்மார்கள், உறவுகளை, உங்களுக்கு சொத்து இழப்பு என்று கூறி ஓ.எம்.பி அலுவலகத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்து விட்டு பதிவுகளை மேற்கொள்கின்றனர்.
சொத்து இழப்பீடு என்று சொன்னால் எத்தனை ஆடுகள், எத்தனை மாடுகள், எத்தனை கோழிகள், உங்களது வீட்டின் பெறுமதி என்ன, உங்களது அங்கத்தவர்கள் எத்தனை பேர்? அவர்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்? எத்தனை பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற விபரத்தை தந்திரமாக எடுத்து அவர்களுடைய கையெழுத்தை வாங்குகின்றார்கள். மக்களுக்கு சேவையாற்ற வந்தவர்கள் மக்களுடைய நலன்களை பேண வந்தவர்கள் இப்படியான வேலைகளை நாங்கள் முற்றுமுழுதாக எதிர்க்கின்றோம்.
உத்தியோகத்தர்கள் தங்களது உத்தியோகங்களை உண்மைக்கும் நீதிக்குமாக பயன்படுத்த வேண்டும். இதைத்தான் நாங்கள் வடக்கு கிழக்கிலே இருக்கின்ற பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்கள் ஆகியவற்றின் இடத்தில் எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>