மக்கள் ஆட்சிக்கு எதிராக, போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநரின் முயற்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்

Share

ஆளுநர் மாளிகைக்கு பொதுமக்களை அழைத்து போட்டி அரசாங்கம் நடத்த ஆளுநர் முயற்சி செய்கிறாரென்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்து புகாரளிக்கலாம் என்ற ஆளுநர் அர்லேக்கரின் பேச்சிற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆளுநர் மாளிகையை அணுகலாம், கோரிக்கைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்’ என நூல் வெளியீட்டு விழாவில் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பேசியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சிக்கு எதிராக, ஒரு போட்டி அரசாங்கம் நடத்தும் பகிரங்க அறிவிப்பாகும். ஆளுநரின் செயல் மாநில அரசின் நிர்வாகத்தில் நேரடியாக தலையிடும் அதிகார அத்துமீறலாகும்; ஆளுநரின் அத்துமீறலை தடுத்து நிறுத்த, குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>