மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த்திட்டம் ஆரம்பம்!

Share

(16-07-2-26)

மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட விளாத்திகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மனோன்மணி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் மாணவர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் 15ம் திகதி அன்றைய தினம் புதன்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பிக்கப் பட்டு பாடசாபலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மனோன்மணி அறக்கட்டளையின் தலைவர் அகஸ்ரின் சவேரியான் அவர்களின் வழிநடத்தலின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு ஆரோக்கியமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டமானது அமைக்கப்பட்டு பாடசாலையின் அதிபர் M. குணசேகரன் அவர்களின் தலைமையில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் M. ஜெயரூபன் மற்றும் மனோன்மணி அறக்கட்டளையின் பொருளாளர் G.அன்ரனி, மற்றும் மனோன் மணி அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்கள் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத் திட்டமானது சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>