மடோனா செபாஸ்டியனின் “ஹார்ட்டின்” படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

மடோனா செபாஸ்டியன் நடித்துள்ள ‘ஹார்ட்டின்’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. ‘ஹார்டின்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மடோனா செபாஸ்டியன், படத்தின் கதை தன்னை முதல் முறையிலேயே கவர்ந்ததாக தெரிவித்தார். “இயக்குநர் கிஷோர் குமார் ‘ஹார்டின்’ படத்தின் கதையை சொல்லும்போதே அந்தக் கதையுடன் ஒன்றிவிட்டேன். கதையின் உணர்வுகளும், அதில் இருந்த புதுமையும் என்னை மிகவும் ஈர்த்தது” என்று கூறியிருந்தார். மேலும் அவர் பேசுகையில், “‘ஹார்டின்’ திரைப்படம் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை புதுமையான முறையில் சொல்லும் படைப்பாக இருக்கும். இந்த படம் பார்வையாளர்களின் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்தப் படத்தை திறந்த மனதுடன் பாருங்கள். உண்மையாகவே இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார். ‘ஹார்டின்’ திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், “ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா திரைக்கதை நுட்பங்களைப் பாடமாக எடுத்து நியூயார்க்கில் படித்துவிட்டு வந்திருக்கிறார். அதனால் இதன் திரைக்கதையில் அவருடைய பங்களிப்பும் இருக்கிறது. இந்த படம் இரண்டு பெண்களின் பார்வையில் சொல்லப்படும் கதையை கொண்டது” என்கிறார் இயக்குனர். இந்நிலையில், ‘ஹார்ட்டின்’ படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் ஜூன் 26ம் தேதி வெளியாகவுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>