(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பில் இருவரிடம்; விசேட குற்ற விசாரணை பிரிவு சிஜடி என பொய்யான தகவலைச் சொல்லி ஒரு இலச்சத்து 28 ஆயிரம் ரூபாவை வாங்கி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட போலி நபர் ஒருவரை எதிர்வரும் 21 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் செவ்வாய்க்கிழமை 8ம் திகதி உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் வெளிநாட்டு முகவர் ஒருவரிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கொடுத்து எமாறிய நிலையில் அந்த வெளிநாட்டு முகவருக்க எதிராக மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்தனர்.
இதனை அறிந்து கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்தவரும் முன்னாள் இராணுவ புலனாய்வு பிரில் செற்பட்டுவந்தவர் அவர்களிடம் நெருங்கி தான் விசேட குற்ற விசாரணைப் பிரிவு சிஜடி எனவே குறித்த வெளிநாட்டு முகவரிடம் உடன் பணத்தை பெற்று தருவாகவும்; உடன் இந்த பணத்தை வாங்கி தரமுடியும் அதற்கு பணம் தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலியான சிஜடி யிடம் ஒருவர் ஒரு இலச்சத்து 25 ஆயிரம் ரூபாவையும் மற்றவர் 3 ஆயிரம் ரூபா உட்பட ஒரு இலச்சத்து 28 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் வெளிநாட்டு முகவரிடம் பணத்தை வாங்கி கொடுக்காமல் போலியான சிஜடி நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளதையடுத்து அவருக்கு எதிராக பணத்தை கொடுத்து ஏமாறிய இருவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து போலி சிஜடியாக நாடகமாடி வந்த அவரை அவரது வீட்டில் வைத்து திங்கட்கிழமை (7) இரவு கைது செய்து விசாரணையையடுத்து அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்து நேற்று செவ்வாய்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 21 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.