மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7 வது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பெற்றது.!

Share

சீயோன் தேவாலயம். காந்திபூங்கா, மற்றும் கல்லடிப் பாலம் நினைவு தூபிகளில் பலத்த பாதுகாப்புடன் சுடர் ஏற்றப்பெற்று அஞ்சலி!

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7 வது ஆண்டு நினைவேந்தல் 21ம் திகதி அ ன்று செவ்வாய்க்கிழமை (21-04-2026) தேவாயத்தின் முன்னாலும். காந்திபூங்கா, மற்றும் கல்லடி பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட நினைவு தூபிகளில் மக்கள். பாலத்த பாதுகாப்புக்கு மத்திலில் கண்ணீர் மல்க மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் கவனயீர்ப்பு ஆர்பாட்டதிலும் ஈடுபட்டனர்.

2019ம் ஏப்பில் 21ம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தினுள் ஜ.எஸ்.ஜ.எஸ் பயங்கவராத அமைப்பை சேர்ந்தவர்களான ஸாரான்காசீம் தலைமையிலான குழுவினரால் தற்கொலை குண்டுதாக்குதல் நடாத்தப்பட்டது இதில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்ததுடன் சிறுமி ஒருவர் இருககண்களையும் இழந்ததுடன் 2 பேர் இடுப்புக்கு கீழ் இயங்காது நிலையில் படுக்கையில் இருந்துவருகின்றனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7ம் ஆண்டு நினைவேந்தல் 21ம் திகதி அன்று காலை 9.05 மணிக்கு ஆரம்பித்தது இதில் மட்டு சீயோன் தேவாலயத்துக்கு முன்னால் பாதி;கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் மலர்தூவி சுடர் ஏற்றி 2 நிமிட அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2019 ஏப்பிர் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் தனது சிறுவனான மகன் உட்பட ஒரே குடும்பத்தில் 3 பேர்; உயிரிழந்ததுடன் 4 பேர் படுகாயமடைந்ததுடன் சிறுமி ஒருவர் கண்பார்வை இரண்டையும் முற்றாக இழந்து பாதிக்கப்பட்டுள்ள உறவினர் உயிர்நீத்தவர்களின் ஆத்மாசாந்தி வேண்டி மலர் வைத்து சுடர் ஏற்p மௌன அஞ்சலி செலுத்தினார்

மட்டு காந்திபூங்காவில் நிகைவு தூபியில்—

இதேவேளை மட்டு காந்தி பூங்காவில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்ப ட்டிருந்த நினைவு தூபியில் மட்டு மாநகரசபையின் நகரபிதா சிவம் பாக்கியநாதன் தலைமையில் நீனைவேந்தல் இடம்பெற்றது.

இதில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்ட குடும்பத்தினர் கலந்து கொண்டு மலர் வைத்து மெழுகுவர்தி ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

கல்லடி பாலத்துக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில். —-

இதனை தொடரந்து கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் தலைவர் புகாரி ஏற்பாட்டில் கிறிஸ்தவ வணபிதாக்கள் அருட்சகோதரிகள், மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு நினைவு தூபியில் மலர் வைத்து சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து அங்கு 7 வரும் கடந்தும் எங்களுக்கான நீதி எங்கே என கோரி கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>