மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட்ட 336 குடும்பங்களுக்கு இளம் பெண்ணியக் குழு அமைப்பு உலர் உணவு பொதிகள் பொருட்கள் வழங்கிவைத்தது

Share

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘டித்வா’ புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இளம் பெண்ணிக்குழு அமைப்பு யுனெப்ஸ் அமைப்பின் விருத்தி ( (UNOPS-VRIDDHI) திட்டத்தின் மனிதாபிமான உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி அனுசரணையுடன் மூன்று கட்டமாக கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் மற்றும் 256 கர்பிணித் தாய்மார்கள் சுடுநீர் போத்தல் உட்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகளை 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைப்பின் தலைவி அஜானி காசிநாதர் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது,

இளம் பெண்ணிக்குழு அமைப்பு சூறாவளி மற்றும் வெள்ளத்திற்கு பதிலளிக்கும் விதமாக, யுனிசெப் அமைப்பின் விருத்தி திட்டத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு 1 மில்லியன் ரூபா மதிப்புள்ள உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்கும் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமை அளித்து முதற்கட்டமாக ஏறாவூர், களுவங்கேணி மற்றும் ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராம பிரிவுகளைச் சேர்ந்த 122 கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சுடுநீர் போத்தல் உட்பட்ட பொருட்கள் அடங்கி பொதிகளும்

இரண்டாம் கட்டமாக வேப்பவெட்டுவான் கிராம சேவகர் பிரிவு ஏறாவூர் பற்று பிரதேசத்தில் மற்றும் 80 குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் மூன்றாம் கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 28ம் திகதி மூன்றாம் கட்டம் கோறளைப்பற்று மத்திய மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள. காவத்தமுனை, பிறைந்துறைச்சேனை, மாஞ்சோலை, பதுரியா பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 134 கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சடுநீர் போத்தல் உட்பட்ட பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அந்தந்த பகுதி கிராம உத்தியோகத்தர்கள், பொது சுகாதார மருத்துவச்சிகள், மகளிர் மேம்பாட்டு அதிகாரிகள் உட்பட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொதிகள் வழங்கி வைத்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>