மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ‘முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பு’ உணர்வு பூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பெற்றது

Share

(கனகராஜா சரவணன்)

முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 17 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் 18ம்திகதி அன்று திங்கட்கிழமை (18) நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க காலில் காலை 10.10 க்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் பொது சுடர் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து கஞ்சி பரிமாறப்பட்டது டன் இனப்படுகொலை நடைபெற்ற போது நேரடியாக பாத்து அங்கிருந்து தப்பி வந்தவர்கள் அங்கு நடந்த படுகொலையை தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துக்காக இடம்பெற்ற படுகொலை காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளுக்கு ஒன்று கூடி தமிழருக்கு நடந்த துயரத்தையும் துன்பத்தையும் பங்கெடுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>