– கால்நடை பண்ணையாளர்கள் அறிவிப்பு–
((கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு திராய்மடு மற்றும் பாலைமீன்மடு பகுதிகளில் கால்நடை வளர்ப்பா ளர்களின் மாட்டுபட்டிகளில் உள்ள 40 மாடுகளை இதுவரை திருடர்கள் திருடிச் சென்று இறைச்சியாக்கியுள்ளனர் எனவே இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா சன்மானமாக வழங்கப்படும் என பொதுமக்களிடம் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா நிறுவகத்தில் 2 6ம் திக வியாழக்கிழமை அன்று (26-02-2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கால்நடைவளர்ப்பு பண்ணையாளரும்ஈ வர்த்தகருமம் ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்டு இவ்வாhறு தெரிவித்தார்
குறித்த பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட 15 பேருக்கு மேற்பட்ட கால் நடை வளர்ப்பாளர் மாடு மற்றும் ஆடுகளை ஜீபோனவாய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர.
இந்த நிலையில் குறித்த பகுதிகளில் நள்ளிரவில் சொகுசு வாகனங்களான கே.டி.எச். ரக வான், மூடிய பட்டா ரக லொறி, கார் போன்ற வாகனங்களின் திருடர்கள் மாடுகள் ஆடுகளை திருடிச் சென்று ஏறாவூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று அதனை வெட்டி இறைச்சியாக்கி வருகின்றனர்.
இந்த மாடுகள் திருட்டு தொடர்பாக கொக்குவில் பொலிசாரிடம் பல முறைப்பாடு செய்திருந்த போதும் இந்த திருட்டுக் கும்பலை இதுவரை கைது செய்யவில்லை. அதேவேளை கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் 4 மாடுகள் திருட்டுப் போன நிலையில் ஏறாவூர் பகுதியில் மாடு அறுக்கும் மடுவத்ததில் இருந்து ஒரு மாட்டை இறைச்சிக்காக வெட்டிய நிலையிலும் 3 மாடுகளை உயிருடன் மீட்டதுடன் ஒருவரை கைது செய்து நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுவருகின்றது .
அதேவேளை கடந்த சுதந்திர தினத்திற்கு முன்தினமான 3 ம் திகதி இரவு பட்டியில் இருந்த கன்றுதாச்சியான பசுமாடு உட்பட 4 மாடுகள் திருட்டுப் போயுள்ளது. இவ்வாறு நாளாந்தம் தொடர்ச்சியாக எங்களது மாடுகள் திருட்டுப் போகின்றது.
இவ்வாறு மாடுகள் திருடப்படுவதால் கால்நடைவளர்ப்பு மேற்கொள்;ளமுடியாது நிலை ஏற்பட்டுள்ளது எனவே பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் இந்த மாடுகள் திருட்டில் ஈடுபடுவர்களை கண்டால் அவர்களை பிடித்து தருபவர்களுக்கு சன்மானமாக 25 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படும் என பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் அறிவித்தனர்.