மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தொடர்பாக அவதூறான வீடியோ பதிவு செய்த சம்பம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Share

(கனகராசா சரவணன்)

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீமிக்கு எதிராகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தொடர்பிலும் காத்தான்குடியின் பிரமுகர்கள் சிலர் தொடர்பாகவும் வெளியிடப்பட்ட வீடியோ பதிவு தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றை 12ம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு வேட்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீம் செய்துள்ளார்

குறித்த வீடியோவை தயாரித்தவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியவர்கள் அதனை பகிர்ந்தவர்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் காத்தன்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை இந்த அவதூறாக வீடீயோவை தயாரித்து பதிவேற்றியவர்கள் தொடர்பாக சட்டத்தரணிகள் ஊடாக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வேட்பாளர் எம்.பீ.எம்.பிர்தௌஸ் நளீம் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>