மட்டு ஆரையம்பதியில் ‘மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழு’வைச் சேர்ந்த இருவர் ஆயுதங்களுடன் கைது

Share

(கனகராஜா சரவணன்)

மட்டு ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் கோவில் முன்றலில் கடந்த மாதம் ‘மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழு’வினரின் வாள்வெட்டு தாக்குதலில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக தலைமறை வாகியிருந்து வந்த 26 வயதுடைய அலியாஸ் மாச்சி என்றழைக்கப்படும் மதுஷன் மற்றும் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உட்பட இருவரை 9ம் திகதி புதன்கிழமை (08) இரவு வாள்களுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

அது பற்றி தெரியவருவதாவது

ஆரையம்பதி; செல்வநகர் பகுதியைச் சேர்ந்த விஜயரியன் தலைமையில்; மட்டக்களப்பு ரவுடி குழு என்ற பெயரில் இயங்கிவரும் வாள்வெட்டுக்குழு கடந்த மாதம் 29 ம் திகதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் மக்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் நடாத்திய ‘மட்டக்களப்பு ரவுடி வாள்வெட்டுக் குழு’வினர் தப்பி ஓடி தலைமறைவாகினர்.

இந்த நிலை தலைமறைவாகி வந்த வாள்வெட்டுக் குழுவை பொலிசார் தேடிவந்துள்ள நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை யடுத்து சம்பவ தினமான புதன்கிழமை இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தவராஜா றஜீவ்காந்தன் தலைமையிலான குழுவினர் வாள்வெட்டுக் குழுவினர் தலைமறைவாகியிருந்த வீட்டை சுற்றிவளைத்து இருவரை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் 3 வாள்களை மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு ரவுடி வாள் வெட்டு குழுவைச் சேர்ந்த 26 வயதுடைய அலியாஸ் மாச்சி என்றழைக்கப்படும் செல்வநகரைச் சேர்ந்த மதுஷன், மற்றும் செல்வநகரைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் எனவும் இந்த வாள்வெட்டு குழுவினர் இந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வாளுகளுடன் வலம் வந்து பொது மக்களை அச்சுறுத்தி வந்துள்ளதுடன் போதை பொருள் கடத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பலர் மீது வாள்வெட்டு தாக்குதல்கள் மேற் கொண்டு வந்துள்ளனர் எனவும்

கடந்த 2025ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் ஆரையம்பதி மகாவித்தியாலய மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளதாகவும் இந்து குழுவில் அந்த பகுதியைச் சோந்த 15 தொடக்கம் 28 வயது வரையிலான 10 க்கு மேற்பட்டவர்கள் இவ்வாறு செயற்பட்டுவருவதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>