மண்கும்பான் பொது நிர்வாக ஓய்வு விடுதி அருகிலே விசமிகளின் செயலால் தீயில் கருகிய நிழல் தரும் மரக் கன்றுகள்

Share

பு.கஜிந்தன்

மிகவும் சிரமங்களுக்கு மத்தியி்ல் பல வருடங்களாக, தரவை நிலத்தில் சிறிது சிறிதாக வளர்க்கப்பட்ட மரங்கள் சிலரின் பொறுப்பற்ற செயற்பட்டால் தீயில் முற்றாக எரிந்து இன்று நாசமாகியது.

யாழ்ப்பாணம் – மண்கும்பான் பொது நிர்வாக ஓய்வு விடுதி அருகிலே மிகுந்த பணச்செலவில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிழல் தரும் மரங்கள் பொறுப்பற்றவர்களால் எரித்து அழிக்கபட்டுள்ளது.

மேய்ச்சல் தரவை புற்களை மாடுகளுக்கு உணவாக கூடாது என்பதற்காக எரித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விசமிகளினாலேயே இந்த வேலைசெய்யபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அருகில் அரச பொது நிர்வாக ஓய்வு விடுதி இருந்தும் அங்குள்ள அரச ஊழியர்கள் கண்டும் காணாமலிருப்பது வேதனையளிக்கிறது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>