நடராசா லோகதயாளன்.
யாழ்ப்பாணம் மண்டைதீவு பொலிஸ் காவல் நிலையம் மீது பெற்றோல் குண்டு வீசியதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகின்றது.
மண்டைதீவில் சிலர் கடத்தல் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிவித்து பொலிசார் தேடுதலில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிசாரைத் தாக்க முற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பொலிசாரின் காவல் நிலையத்தில் தங்கியிருந்த சமயம் இரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மூன்று பெற்றோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் ஓரு பெற்றோல் குண்டை வீச முற்பட்டமோதும் பெற்றோல் போத்தல் வீதியில் வீழ்ந்து வெடித்துள்ளது. ஏனைய இரண்டும் பொலிஸ் காவல் நிலையம் உள்ளே வீழ்ந்து வெடித்துள்ளது.
இருந்தபோதும் பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை இதனையடுத்து அப்பகுதியில் மேலதிக பொலிசார் மற்றும் புலனாய்வாளர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>