தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் மாலை 5 மணி வரை 83.86 % மற்றும் 78.53% வாக்குகள் பதிவாகியுள்ளன. புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியில் 78.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களுக்கான வாக்குச்சாவடியில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இந்நிலையில், மாலை மணி வரை பதிவான வாக்கு சதவீதம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, மாலை 5 மணி வரை மதுராந்தகத்தில் 83.86 சதவீதமும், தாராபுரம் தொகுதியில் 78.53 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியில் 78.83 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் மாலை 5 மணி வரை 83.86 % மற்றும் 78.53% வாக்குகள் பதிவாகியுள்ளன
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>