மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல். இவர் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அவர் அந்நாட்டு வர்த்தகம், வேளாண்மை, தொழில்துறை என பல்வேறு துறை அமைச்சர்களை சந்தித்தார். மேலும், இந்தியா , இஸ்ரேல் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தையிலும் பியூஷ் கோயல் ஈடுபட்டார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வர்த்தக ஒப்பந்தம், முதலீடு, இருநாட்டு உறவு , தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>