‘மத்திய அரசு போதிய நிதி வழங்காததால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறுத்தம்’ – அமைச்சர் கே.என்.நேரு

Share

அரியலூர் மாவட்டத்தில் ரூ.11.58 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மத்திய அரசு போதிய நிதி வழங்காததால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>