மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு, அங்கு வசித்து மற்றும் பணிபுரிந்து வரும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாபை உறுதி செய்ய தேவையான மற்றும் உரிய அனைந்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>