மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியாவில் இரண்டு நாள் பயணமாக ரஷியா செல்ல உள்ளார். நாளை ரஷிய தலைநகர் மாஸ்கோ செல்லும் ஜெய்சங்கர், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ரஷியத் தரப்பு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அத்துடன், ரஷிய துணைப் பிரதமர் டெனிஸ் மன்டுரோவுடன் இணைந்து, வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு குறித்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி விவாதிக்க உள்ளார். மேலும், ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவைச் சந்திக்கும் ஜெய்சங்கர், பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>