‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் ஒடிடி வெளியீடு பதிவேற்றம்

Share

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நடித்துள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. விஜயா சதீஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.கே.ப்ரியன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை ரவி வர்மா மேற்கொண்டார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில், இப்படம் கடந்த 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் ஓ.டி.டி. வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, உழைப்பாளர் தின மற்றும் வார விடுமுறையையொட்டி நாளை முதல் சன் என்எக்ஸ்டி-ல் கண்டு களிக்கலாம். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>