வங்காளதேச நாடாளுமன்ற தேர்தலில் வங்காளதேச தேசியவாத கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, கலீதா ஜியா அவர்களின் மகன் தாரிக் ரகுமான் விரைவில் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில் தாரிக் ரகுமான் நிருபர்களிடம் பேசியதாவது: “பாதுகாப்பான மற்றும் மனிதாபிமான வங்காளதேசத்தை உருவாக்க அனைவரது ஒத்துழைப்பும் தேவை. இந்த முறை நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அனைவரும் பொறுப்புடன் பங்களிக்க வேண்டும். எந்த விலையையும் கொடுத்தாவது வங்காளதேசத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறோம். எந்த காரணத்திற்காகவும் யாருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது. நாட்டின் சுதந்திரத்தை விரும்பும் மக்கள் வங்காளதேச தேசியவாத கட்சியை வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்த வெற்றி வங்காளதேச மக்களின் வெற்றி. அனைவரின் விருப்பத்தின் அடிப்படையில் நாட்டை கட்டியெழுப்புவோம்,” என்றார்.
மனிதாபிமான வங்காளதேசத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் – தாரிக் ரகுமான்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>