மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Share

(மன்னார் நிருபர்)

(11-07-2023)

மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(11) பணிப்பகிஸ்கரிக்கை முன்னெடுத்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

-இந்த நிலையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வின் கருத்தை கண்டித்து வட மாகாண ரீதியில் சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் பணிப் பகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவித்து , மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

-இன்று செவ்வாய்க்கிழமை(11) காலை மன்னார் நீதிமன்றத்திற்கு சமூகமளித்த சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப் பை முன்னெடுத்ததோடு,முல்லைத்தீவில் இடம் பெறும் போராட்டத்திலும் கலந்து கொள்ள முல்லைத்தீவிற்கு சென்றனர்.

-இந்த நிலையில் இன்றைய தினத்துக்கான வழக்கு விசாரணைகள் பிரிதொரு தினத்திற்கு தவணையிடப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>