மன்னாரில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம்

Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(12-09-2024)

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் 13-09-2024 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மன்னார் நகர பேருந்து நிலையத்தில் இடம் பெற உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில்,முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் குறித்த பொதுக்கூட்டம் இடம் பெற உள்ளது.

குறித்த பொதுக் கூட்டத்தில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் அரசியல் கட்சித் தலைவர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

குறித்த பொதுக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசிய பொது கட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>