மன்னாரில் தியாக தீபம் அன்னை பூபதியின் 35 வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Share

(மன்னார் நிருபர்)

(19-04-2023)

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உண்ணாநோன்பு இருந்து உயிர் தியாகம் செய்த தியாக தீபம் அன்னை பூபதியின் 35 வது ஆண்டு நினைவு தினம் மன்னாரில் புதன்கிழமை (19-04-2023) அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சி மன்னார் கிளையின் ஏற்பாட்டில் காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது தியாக தீபம் அன்னை பூபதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இதன் போது கட்சியின் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை தியாக தீபம் அன்னை பூபதி நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு 19-04-2023 காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது மன்னார் நகர சபையின் முன்னாள் தவிசாளர்,உப தவிசாளர், உறுப்பினர்கள் மத தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>