மன்னாரில் வட மாகாண சுற்றுலா அதிகார சபை நாட்டியுள்ள பலகையில் சைவ சமய அடையாளங்கள் காணப்படுவதனால் மன்னார் குருமுதல்வர் ஆட்சேபம்!

Share

ந.லோகதயாளன்.

மன்னாரில் வட மாகாண சுற்றுலா அதிகார சபை நிறுவியுள்ள வழிகாட்டல் பலகையில் சைவ சமய அடையாளங்கள் காணப்படுவதனால் அதனை அகற்றுமாறு மன்னார் குருமுதல்வர் எழுத்தில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மாவட்ட ரீதியில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அடையாள விளம்பர பலகைகளை மாகாண சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நாட்டி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரின் நுழைவாயில் அருகே உள்ள மதகுப் பகுதியில் தலைமன்னார் இராமேஸ்வரம் இடையே காணப்படும் இராமர் பாலம் தொடர்பிலான அறிவித்தல் பலகையும் கடந்த வாரம் நாட்டப்பட்டது.

இவ்வாறு நாட்டப்பட்ட அறிவித்தல்ப் பலகையில் இராமர், இலட்சுமணன் ஆகியோருடன் ஆஞ்சநேயர் போன்ற சமய கடவுள்களின் படங்களும் பிரதி பலிக்கின்றது. சைவ சமயத்தை மையமாக கொண்டதாக காணப்படுவதனால் அந்த அறிவித்தல்ப் பலகையை அகற்றுமாறு மன்னார் ஆயர் இல்லம் அழுத்தம் கொடுத்து வருகின்றது.

அழுத்தம் பிரயோகிக்கப்பட்டபோதும் அறிவித்தல்ப் பலகை அகற்றப்படாத காரணத்தால் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் கடித தலைப்பில் மன்னார் நகரசபையின் தவிசாளருக்கு முகவரியிடப்பட்டு மறைக்கோட்ட முதல்வர் து.கிருஸ்துநாயகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக முன்னர் பதவி வகித்த அ.பத்திநாதன் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் சில நாட்களுக்கு முன்னர் பதவி நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>