மன்னார் ஆயரை சந்தித்த மன்னார் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உப தவிசாளர்கள் ஆகியோர் அவரது ஆசியைப் பெற்றனர்.

Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(24-06-2025)

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்,உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் 24ம்திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளர் றொய் ற்றன் சாந்தினி குரூஸ்,மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை(24) மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்து மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை சந்தித்து ஆசி பெற்றனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாட பட்டதாக அறிய முடிகின்றது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>