மன்னார் சதொச புதைக்குழியில் இருந்து, விளையாடரங்கு வரை சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டுபேரணி!

Share

பு.கஜிந்தன்

சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

இந்த பேரணியானது மன்னார் சதொச புதைக்குழியில் இருந்து, விளையாடரங்கு வரையில் குறித்த பேரணி செல்லவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள், வர்த்தக சங்கத்தினர், தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் அரசியல்வாதிகள், அரசியல் செயற்பட்டாளர்கள் , மத குருமார்கள் என அனைத்து தரப்பினரையும் தமது போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு கோரியுள்ளனர்.

போராட்டத்திற்கு செல்வோருக்கான இலவச வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>