மன்னார் சின்னவலையன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

Share

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்

மன்னார் சின்னவலையன்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்றைய தினம் 30.03.2023 ( வியாழக்கிழமை ) மாணவர்களினால் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

வித்தியாலய முதல்வர் சி.பத்மதாசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. A.வத்சலன் (உதவிக்கல்வி பணிப்பாளர்- மடு) சிறப்பு விருந்தினர் திரு. அ.ஜெரால்ட் அல்மேடா(கோட்டக்கல்வி பணிப்பாளர்- மடுக்கோட்டம்) கௌரவ விருந்தினர்களாக திரு.s தனுசன்- ( கிராம அலுவலர்-பரசங்குளம்) திரு. M.M.M. அஸ்வர் ( முதல்வர்-மன்/காக்கையன்குளம்- முஸ்லிம் மகா வித்தியாலயம்) திருமதி.த.நாகராணி- (ஓய்வுநிலை அதிபர்) ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்

நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>