மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவிற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து எடுத்து வரப்பெற்றது.

Share

(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(20-05-2026)

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு குடியேற்றத்திற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து 20ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு எடுத்து வரப்பெற்றது.

திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா வியாழக்கிழமை (21) இடம்பெற உள்ள நிலையில் கொடிச்சீலை புதன்கிழமை (20) சம்பிரதாய பூர்வமாக எடுத்து வரப்பட்டது.

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட குறித்த கொடிச்சீலை சம்பிரதாய பூர்வமாக கொடிச் சீலை வழங்குகின்றவர்களினால் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு மற்றும் ஆலய நிர்வாகத்தினரிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பெற்றது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>