மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பஞ்சரத உற்சவம்.

Share

(08-06-2025)

வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த பெருவிழா வின் விசேட திருவிழாவான தேர் திருவிழா 8ம் திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக இடம் பெற்றது.

உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள், தீபாரதனைகள் இடம் பெற்றதை தொடர்ந்து உள் வீதி உலா வந்து மூர்த்திகள் தொடர்ந்து தேரில் எழுந்தருளி தொடர்ந்து மக்கள் வடம் பிடித்து இழுக்க தேர் வீதி உலா வந்தது.

அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் பச்சை சார்த்தப்பட்டு ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டது.

கடந்த மாதம் 31 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் தேர் திருவிழா மிக விமர்சையாக ஆலயத்தின் பிரதம குரு தியாகராஜா கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

இவ் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

செவ்வாய்க்கிழமை தீர்த்த திருவிழாவும், உற்சவமும் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>