மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வு குறித்து அரச அதிபர் தலைமையில் விசே கலந்துரையாடல்

Share

(மன்னார் நிருபர்)

(14-02-2023)

 

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வு குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (14) மதியம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற உள்ள மகா சிவராத்திக்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து குறித்த கலந்துரையாடல் அமைந்தது.

குறித்த கலந்துரையாடலில் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகம்,அழைக்கப்பட்ட துரை சார் திணைக்கள அதிகாரிகள்,கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்வரும் 18 ஆம் திகதி இடம் பெற உள்ள மகா சிவராத்திரி குறித்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பொலிஸ் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அரச தனியார் போக்குவரத்துக்கள்,குடிநீர்,சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது.

மேலும் பாதுகாப்பு,உணவு உள்ளிட்ட விடையங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு,சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த காலங்களை விட இம்முறை இலட்சக்கணக்கான மக்கள் நாடளாவிய ரீதியில் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிற மையினால் அதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>